ta-ttb-test

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttest

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 7 - 17 < sentence 18 - 28 > sentence 29 - 39

மத்திய குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி வெங்கடேஸ்வரன் இதற்கான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் . இந்தியப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தெரிய வந்துள்ளது . இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒபாமா செல்லவுள்ளார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருகின்றனர். அவர் எந்தத் தேதியில் இந்தியாவுக்குச் செல்கிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை . அநேகமாக அவர் நவம்பர் 6-ம் தேதி இந்தியா செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பயணத்தின் போது அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டார் என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு அவர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும் , பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை வாஷிங்டன் வருமாறு அவர் அழைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கேரள முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணாகரன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 93 வயதான கருணாகரனின் உடல்நிலை சீராக உள்ளது. காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் வனத்தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு 2009-2010ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .

Download XMLDownload textSentence viewDependency trees