ta-ttb-test

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttest

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 1 - 6 < sentence 7 - 17 > sentence 18 - 28

அதுபோன்று பிகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் . பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த காங்கிரஸ் எல்லா முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார். ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐபிஎல் அமைப்பின் ஆணையராக இருந்தவர் லலித் மோடி. இவர் 2009 ஜனவரி முதல் 2010 ஜூன் மாதம் வரை பதவியில் இருந்த போது பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார் எழுந்தன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவ செயலாளர் என். சீனிவாசன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை புதன்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, ஊடக உரிமைகள் வழங்கியது, விளம்பரங்கள் ஒளிபரப்ப நேரம் ஒதுக்கியது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது ஆகியவற்றில் லலித் மோடி குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக செயல்பட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது . இதன் மூலம் ரூ. 470 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த வழக்கை, மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி கமிஷனர் ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டத்தின் 409, 420, 468, 477 (ஏ ), 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ், லலித் மோடி, வேணு நாயர், ஆண்ரூ ஜார்ஜியோ, சீமஸ் ஓபிரயன், ஹரீஷ் கிருஷ்ணமாச்சாரி, அஜய் வர்மா ஆகியோர் மீது மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் .

Download XMLDownload textSentence viewDependency trees