ta-ttb-test

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttest

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 29 - 39 < sentence 40 - 50 > sentence 51 - 61

2002 முதல் 6 ஆயிரத்து 671 பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது . மலேரியாவுக்கு ஒரிசாவில் தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அங்கு மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அதற்கு அடுத்ததாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக லான்செட் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . நொய்டாவில் எச்சிஎல் (HCள்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 35 வயது சாஃப்ட்வேர் எஞினியர் ஒருவர் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஹைதராபாதைச் சேர்ந்த எஞினியர் ரத்தன்குமார் நொய்டாவில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்தார். வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர் நள்ளிரவு வரை கணிப்பொறியில் இணையதளங்களில் உலா வந்துள்ளார் . பின்னர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலைய அதிகாரி பிரதாப் சிங் தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் யாரும் இருக்கவில்லை . அவரது மனைவி, அவர்களது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார் . தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் அவர் எழுதிவைக்கவில்லை .

Download XMLDownload textSentence viewDependency trees