Text view

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttrain
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 7 - 17 < sentence 18 - 28 > sentence 29 - 39

இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப் பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது . மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும். உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது . அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக், உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது . இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும் , இலங்கை 66வது இடத்தையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன . ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை. அமெரிக்கா 11வது இடத்தையும் , ஜெர்மனி 12வது இடத்தையும் , இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன . நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிய வந்தன. வாசகர்களிடம் உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப் பட்டது. அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Download XMLDownload textSentence viewDependency trees