ta-ttb-test
Universal Dependencies - Tamil - TTB
Language | Tamil |
---|
Project | TTB |
---|
Corpus Part | test |
---|
Annotation | Ramasamy, Loganathan; Zeman, Daniel |
---|
View options
Text: - Show: - Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 886 பேருக்கும் , தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்கள் 9 ஆயிரத்து 275 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கிடவும் ; அதுபோலவே, அரசு ரப்பர் கழகப் பணியாளர்கள் 118 பேருக்கும் , தேயிலை தோட்டப் பணியாளர்கள் 313 பேருக்கும் , வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் 359 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . இதன் காரணமாக , அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம், வனத்தோட்டக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்ந்த 12 ஆயிரத்து 951 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் 2009-2010 ஆம் ஆண்டுக்குரிய போனஸாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாகத் தெரிவித்த வெள்ளை மாளிகை, அவரது பயண அட்டவணை இதுவரை இறுதிசெய்யப் படவில்லை எனக் கூறியுள்ளது . இந்திய பயணத்தின் போது ஒபாமா பொற்கோயிலுக்கு செல்லும் திட்டம் ரத்து செய்யப் பட்டு விட்டதாகக் கூறப்படுவது குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் இடம் செய்தியாளர்கள் கேட்டனர். அவரது பயணத்திட்டம் இதுவரை இறுதி செய்யப் படவில்லை எனத் தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான ஒபாமாவின் சுற்றுப்பயண அட்டவணை அடுத்த வாரம் இறுதி செய்யப் பட்டு விடும் என்றார் அவர். இந்தியாவில் மலேரியா நோய் காரணமாக ஆண்டுக்கு ஏறக்குறைய 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் மலேரியா நோயால் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்திருந்தது . ஆனால் லான்செட் இதழ் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது . 90 சதவீத உயிரிழப்புகள் ஊரகப் பகுதிகளில் ஏற்படுகின்றன. எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் அளிக்காததால் 86 சதவீத உயிரிழப்புகள் வீட்டிலேயே நிகழ்வதாக லான்செட் தெரிவிக்கிறது.
Download XML • Download text
• Sentence view • Dependency trees