ta-ttb-dev
Universal Dependencies - Tamil - TTB
Language | Tamil |
---|
Project | TTB |
---|
Corpus Part | dev |
---|
Annotation | Ramasamy, Loganathan; Zeman, Daniel |
---|
View options
Text: - Show: - Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அணு மின் நிலையங்களுக்குத் தேவையான அணு உலைகளைத் தயாரிப்பதற்கான வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். இதேபோல இந்திய விண்வெளி ஆய்வில் அமெரிக்காவுடனான கூட்டு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த உதவும். நீராதாரம், பருவ நிலை நிலவரம், வானியல் ஆய்வு, விமான சேவை உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது . மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பிடிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும். இதற்காக பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்க நடவடிக்கையை அமெரிக்கா ஏற்கும் என நம்புவதாக மீரா சங்கர் கூறினார். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சர்வதேச நிதி அமைப்புகளான உலக வங்கி மற்றும் அன்னியச் செலாவணி நிதியம் (ஐஎமெப்) உள்ளிட்டவற்றில் நிதிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது . இது தொடர்பான ஆலோசனைகளையும் இந்தியா வழங்கி வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது . சர்வதேச அளவில் தமக்குள்ள பொறுப்பை செயல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வமாக உள்ளது என்றார் மீரா சங்கர். பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மதச்சார்பின்மை குறித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் எப்படி பேச முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. அவரது மதச்சார்பின்மை நம்பகத்தன்மைக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறினார்.
Download XML • Download text
• Sentence view • Dependency trees