ta-ttb-dev
Universal Dependencies - Tamil - TTB
Language | Tamil |
---|
Project | TTB |
---|
Corpus Part | dev |
---|
Annotation | Ramasamy, Loganathan; Zeman, Daniel |
---|
View options
Text: - Show: - Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கைவினை கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் , உழைப்பிற்கும் , தொழிலுக்கும் மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த நாட்கள் அமைந்து இருக்கின்றன. வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை. இந்த நன்னாளில், அனைவரும் எல்லா நலன்களையும் , வளங்களையும் பெற்று அமைதியுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலர மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் . தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் என். வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், ப. செல்வசிங், இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம். கோபு, எஸ்.எஸ். தியாகராஜன், கே. சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களும் , ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் . தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காணப்படவில்லை . இப்பிரச்னையில் தி.மு.க. சார்பிலான தொ.மு.ச. தொழிற்சங்கத்துடன் சேர்ந்து, ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்ளுக்கு எதிராக செயல்படுகின்றன. பிரச்னைக்கு தீர்வு காண தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப் படுகின்றன.
Download XML • Download text
• Sentence view • Dependency trees