Dependency Tree

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttrain
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Select a sentence

Showing 202 - 301 of 400 • previousnext

s-202 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதை விட்டு பள்ளிக் கல்வி வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார் .
s-203 ஐஐடியில் மருத்துவப் படிப்புகள், வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், புதிய நுழைவுத் தேர்வு முறைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக நேற்று அமைச்சர் கபில் சிபல் கூறியிருந்தார் .
s-204 இந்நிலையில் , ஆளுங்கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், பள்ளிக் கல்வி மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கபில் சிபலுக்கு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
s-205 இவர் ஏற்கெனவே, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மாவோயிஸ்ட் எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
s-206 குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
s-207 ஆமதாபாத், ராஜ்கோட், சூரத், வதேதரா, ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் மொத்தம் உள்ள 555 உள்ளாட்சி இடங்களில் 444-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
s-208 சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது .
s-209 இதுகுறித்து இன்று பொதுக்கூட்டங்களில் பேசிய முதல்வர் நரேந்திர மோடி, 'காங்கிரஸ் - சிபிஐ புலனாய்வு அமைப்பின் கூட்டணியை மக்கள் நிராகரித்து விட்டனர்' என்று குறிப்பிட்டார்.
s-210 குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
s-211 தில்லி காமன்வெல்த் போட்டியில், 10 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹீனா சித்து - அன்னு ராஜ் ஜேடி தங்கப் பதக்கம் வென்றது.
s-212 இதையடுத்து, இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது .
s-213 இந்நிலையில், சம்ரேஷ் ஜங் - சந்திரசேகர் குமார் செளத்ரி ஜோடி 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
s-214 இதுபோல், பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் .
s-215 சாகும் வரை சிறையில் அடைத்து வைத்திருந்தாலும் செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
s-216 போரின்போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர்பான விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
s-217 இதில், ஆஜராக வந்த போது, பொன்சேகா மேற்கண்ட தகவலை கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது .
s-218 'நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்.
s-219 அச்சப்பட வேண்டாம்.
s-220 நான் குற்றம் அற்றவன் என்ற வகையில் தைரியத்துடன் உள்ளேன்.
s-221 எனவே, நீங்களும் தைரியமாக இருங்கள்.
s-222 எனக்கு ஆயுள் தண்டனை விதித்தாலும் அல்லது சாகும் வரை சிறையிலேயே அடைத்து வைத்தாலும் செய்யாத குற்றத்துக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
s-223 'என்று நீதிமன்றத்தில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் இடையே பொன்சேகா கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-224 தில்லி காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார் .
s-225 இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :.
s-226 தில்லி காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபட்சவை மத்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
s-227 ஈழத் தமிழர்களை ஈவிரக்கம் இன்றி லட்சக் கணக்கில் கொன்றுகு வித்த ராஜபட்சவை தில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் மத்திய அரசின் அணுகுமுறையானது சுமார் 10 கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது .
s-228 அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது .
s-229 ராஜபட்சவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மனிதநேயம் அற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற நிலையில், மத்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் மத்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
s-230 மத்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
s-231 ராஜபட்சவை அழைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.
s-232 நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது .
s-233 ஆனால் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன்.
s-234 தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
s-235 இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
s-236 கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார் .
s-237 இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :.
s-238 எடியூரப்பா அரசை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், 5 சுயேட்சை எமெலேக்கள் உட்பட 16 எமெலேக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர் .
s-239 கட்சித் தாவல் சட்டம் சுயேட்சை எமெலேக்களை கட்டுப்படுத்தாது.
s-240 மேலும், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி 11 பாஜக எமெலேக்கள் வாக்களித்த பின்னர் தான் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்.
s-241 குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு வாக்கு கூடுதலாக பெற்று எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தது சட்ட விரோதமான செயல்.
s-242 சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளி, அடிதடி, கூச்சல், குழப்பம் நாட்டின் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய களங்கத்தை உண்டாக்கிய தேசிய அவமானம் ஆகும்.
s-243 எனவே, உடனடியாக எடியூரப்பா அரசை நீக்கி விட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
s-244 இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
s-245 மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நச்சுத்தன்மை கொண்ட கழிவு நீரை கடலில் கலக்க அனுமதித்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து நாளை மறுநாள் திருவொற்றியூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் .
s-246 இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிருப்பதாவது :.
s-247 சென்னை, திருவொற்றியூர் பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது .
s-248 சென்னையை ஒட்டியுள்ள , திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
s-249 தி.மு.க. அரசின் துணையோடு, மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனம் கலந்த கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடலில் கலப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்றும் , இதற்காக மிகப் பெரிய தொகை அமைச்சர் கே.பி.பி. சாமியிடம் கொடுக்கப் பட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
s-250 மேற்படி ஆலையின் நச்சுத் தன்மை கொண்ட நீர் கடலில் கலந்தால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் என்றும் , மீன்கள் செத்து மடிகின்ற சூழ்நிலை உருவாகும் என்றும் , மீன்பிடி தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
s-251 மீனவ விரோதச் செயலுக்குத் துணை போகும் அமைச்சர் கே.பி.பி. சாமிக்கும், இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத முதல்வர் கருணாநிதிக்கும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
s-252 மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நச்சுத் தன்மை கொண்ட கழிவுநீரை கடலில் கலக்க அனுமதித்திருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும் , உடனடியாக இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் , திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் நகர அதிமுக சார்பில், 14.10.2010 வியாழக் கிழமை காலை 10 மணி அளவில், திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
s-253 இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
s-254 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் செயல்களால் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
s-255 பக்டிகா மாகாணத்தில் உள்ள ஜானி கேல் மாவட்டத்தில், பொதுமக்கள் பயணம் செய்த வாகனம் ஒன்றை தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்கியது.
s-256 இதில், பயணம் செய்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
s-257 ஜபூல் மாகாணத்தில் ஷாஜோய் மாவட்டத்தில் பொதுமக்கள் பயணம் செய்த ஜீப் ஒன்று சாலையோரத்தில் கிடந்த வெடிகுண்டு மீது ஏறியது.
s-258 இதில், அந்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
s-259 சாலையில் கிடக்கும் குண்டுகள் மற்றும் வன்முறைக்கு பொதுமக்கள் பலியாகும் சம்பவங்கள் ஆப்கனில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.
s-260 ஆப்கனில், 2010 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் சுமார் 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் .
s-261 2000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது .
s-262 உக்ரைன் நாட்டில் பஸ் ஒன்றின் மீது ரயில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
s-263 இன்று காலை டிநிபெட்ரோவிஸ்க் மாகாணத்தில் உள்ள மார்ஹனெட்ஸ் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
s-264 அங்குள்ள ரயில்வே கேட் தானியங்கி முறையில் செயல்படக் கூடியது.
s-265 முன்னதாக, ரயில்வே கேட் மூடுவதற்காக கீழே இறங்கிக் கொண்டிருந்தது .
s-266 மேலும், ரயில் வருவதற்கான எச்சரிக்கை ஒலியும் ஒலித்துக் கொண்டிருந்தது .
s-267 ஆனால், இவற்றை கண்டுகொள்ளாமல் ஓட்டுநர் பஸ்சை ரயில் பாதையை கடந்து ஓட்டிச் செல்ல முயன்றார்.
s-268 அப்போது, பயங்கர வேகத்தில் வந்த ரயில் பஸ் மீது பலமாக மோதியது.
s-269 இதில், சம்பவ இடத்திலேயே 37 பேர் உயிரிழந்தனர்.
s-270 இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
s-271 அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
s-272 இதில், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
s-273 இத்தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சர் யெவ்ஹெனி கிரேவட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
s-274 இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உள்ளூர் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள்.
s-275 முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப் பட்டது தொடர்பாக சென்னை மாநகர மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
s-276 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதுரையில் அக்டோபர் 18-ல் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதையொட்டி அவருக்கு கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப் பட்டன.
s-277 இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
s-278 இந்நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது .
s-279 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது :.
s-280 முதல்வர் அலுவலகத் தனிப்பிரிவுக்கு திங்கள்கிழமை பகல் 1.30 மணிக்கு ஒரு இ-மெயில் வந்தது.
s-281 அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறீர்கள்.
s-282 எனவே, உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் 3 பேர் ஊடுருவி உள்ளோம்.
s-283 முதல்வரின் கார் வெளியே செல்லும் போது குண்டு வைப்போம் என்று இ-மெயிலில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
s-284 இந்த கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாநகர காவல்துறை ஆணையர் டி.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார் .
s-285 ஆப்கானிஸ்தானில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேரை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர் .
s-286 ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
s-287 இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் குனார் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தின் மீதும் இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகத்தின் மீதும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது.
s-288 இதில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .
s-289 எனினும் இதை ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது .
s-290 இந்தியர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று தூதரகம் கூறியுள்ளது .
s-291 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது உறுதியாகி விட்டது.
s-292 ஏறக்குறைய 19 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்தைப் பிடிக்க உள்ளது.
s-293 இதற்கான தேர்தல் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற உள்ளது.
s-294 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக இடம்பெறுவதற்கு போட்டியிட்ட கஜகஸ்தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.
s-295 இதனால் இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது .
s-296 ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஒரே ஒரு நாடு மட்டுமே போட்டியிடுவதால் அந்தந்த நாடுகள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
s-297 மேற்கு ஐரோப்பாவுக்கு 2 பிரதிநிதிகளுக்கான இடம் உள்ளது.
s-298 இந்த இரு இடங்களுக்கு கனடா, ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய 3 நாடுகள் போட்டியிடுகின்றன.
s-299 ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவின் இடம் உறுதியாகி விட்டது.
s-300 இதனால் மூன்று வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற உள்ளன.
s-301 வரும் ஆண்டுகளில் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் மிக முக்கிய பங்காற்றும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Text viewDownload CoNNL-U