Dependency Tree

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttrain
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Select a sentence

Showing 101 - 200 of 400 • previousnext

s-101 அடுத்தடுத்த ஆண்டில் துணை ஆட்சியராகவும் , நிதி மற்றும் பொதுத் துறைகளில் சார்பு மற்றும் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
s-102 1987-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
s-103 1992-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராகவும் , அதற்கடுத்த ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
s-104 1996-ம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்தார்.
s-105 2001-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு ஆணையராகப் பணியாற்றினார்.
s-106 2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் உள்துறைச் செயலாளர் பொறுப்பு வகித்தார்.
s-107 கடந்த சில மாதங்களுக்கு விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார்.
s-108 இதன்பின், தலைமைச் செயலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
s-109 கடந்த அதிமுக ஆட்சியில் லட்சுமி பிரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்தார்.
s-110 அவருக்குப் பிறகு இரண்டாவது பெண் தலைமைச் செயலாளார் என்ற பெருமையை மாலதி பெற்றுள்ளார்.
s-111 2008 செப்டம்பர் 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கே.எஸ். ஸ்ரீபதி.
s-112 சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.
s-113 கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது .
s-114 ஓய்வு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :.
s-115 அரசின் பெரு முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி முடிக்கப் பட்டது.
s-116 இந்த கூட்டுப் பணியில் நானும் ஈடுபட்டது தலைமைச் செயலாளராக நான் இருந்த காலத்தில் சாதனையாகக் கருதுகிறேன் என்றார் கே.எஸ்.ஸ்ரீபதி.
s-117 தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் , மாநில தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
s-118 இதற்கான உத்தரவை ஆளுநர் பர்னாலா விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
s-119 மாநில தகவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.
s-120 பதவி நீட்டிப்பு காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே ஸ்ரீபதி ஓய்வு பெற்றுள்ளதால் , மாநில தகவல் ஆணையர் பதவிக்கு அவர் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன .
s-121 டிஜிபி, தலைமைச் செயலராக பெண்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
s-122 தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும் , போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர்.
s-123 அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .
s-124 முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.
s-125 இரு மாநில உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
s-126 கேரளஅரசு பெரியாறு ஆற்றுக்கு இடையே புதிய அணை கட்ட முடிவு செய்து, 380 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது .
s-127 முல்லைப் பெரியாறு அணை பிரச்னை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணையில் இருக்கும் போது, கேரள அரசு வழக்கம் போல உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துச்சமாக நினைத்து புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
s-128 இப்பிரச்னை தொடர்பான வழக்கை தமிழக அரசு முறையாக நடத்தாத காரணத்தால் தமிழகத்துக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது .
s-129 ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில், அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதற்கு முதல்வர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார் .
s-130 அனுமதி இல்லாத இடத்தில் ஆய்வு செய்து விட்டு, புதிய அணை கட்டுவோம் என்று கேரள அரசு அறிவிக்கிறது.
s-131 அணையை உடைப்பது தான் கேரளத்தின் நோக்கம்.
s-132 அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
s-133 இந்த அணை உடைக்கப் பட்டால் தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் பாதிக்கப்படும் .
s-134 2 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது.
s-135 இதனால் ஏற்படக் கூடிய பாதகம் இரு மாநிலங்களுக்கும் தான் என்பதை கேரளம் உணர வேண்டும்.
s-136 அணையை உடைத்தால் எதிர் விளைவுகள் மோசமாக இருக்கும்.
s-137 முல்லைப்பெரியாறு பிரச்னையில் பின்னடைவுக்கு தமிழக அரசின் அணுகுமுறை தான் முழுக் காரணம்.
s-138 இதனால், தமிழகத்தின் வாழ்வாதரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
s-139 வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் மாநாடாக நடத்த முடிவு செய்துள்ளோம் .
s-140 திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை இந்த மாநாடு ஏற்படுத்தும்.
s-141 இந்த மாநாட்டில் கட்சி சாராத இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் வைகோ.
s-142 இலங்கையில் போரினால் பாதிக்கப் பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.
s-143 இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
s-144 வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
s-145 அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
s-146 'எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம் என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.
s-147 கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
s-148 செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.
s-149 வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார்.
s-150 வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர்.
s-151 பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.
s-152 பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
s-153 தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியுடன் அவர் ஆலோசித்தார்.
s-154 அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்து தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
s-155 அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.
s-156 பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
s-157 கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
s-158 கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.
s-159 நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.
s-160 கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.
s-161 ராஜபட்சவுடன் சந்திப்பு:.
s-162 வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார்.
s-163 தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது .
s-164 இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது.
s-165 இது தவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன .
s-166 வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது .
s-167 சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது.
s-168 தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன .
s-169 மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது .
s-170 இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது.
s-171 ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது .
s-172 அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் குழுவினரை விமானத்திலிருந்து இறக்கி அமெரிக்க அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
s-173 அமெரிக்காவில் நடைபெறும் ராணுவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 ராணுவ உயர் அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்றிருக்கினறனர் .
s-174 நேற்று காலை வாஷிங்டனில் இருந்து மாநாடு நடைபெறும் தம்பா நகருக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் செல்லத் தயாராகினர்.
s-175 விமானம் புறப்படத் தயாரான போது அவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
s-176 இந்தத் தகவலை வாஷிடங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது .
s-177 விமான ஊழியரிடம் ராணுவ அதிகாரிகள் உள் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காகவே அவர்கள் அனைவரும் இறக்கி விடப் பட்டதாகக் கூறப் படுகிறது.
s-178 எனினும் இது குறித்த முழு விவரமும் அந்தப் பத்திரிகை செய்தியில் வெளியிடப்படவில்லை .
s-179 கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அந்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் , தூதரகத்துடனோ , அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தி கூறுகிறது.
s-180 அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகே அவர்களை அமெரிக்க அதிகாரிகள் விடுவித்ததாகவும் தெரிகிறது.
s-181 இந்தச் சம்பவத்தையடுத்து , பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பும் படி அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது .
s-182 அவர்கள் இன்று பாகிஸ்தான் திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
s-183 ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நிகழ்ந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
s-184 இரு போலீசார் காயமடைந்தனர்.
s-185 ஜாமா வனப்பகுதிகளில் இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் தலையில் குண்டு பாய்ந்த ஜாமா போலீஸ் நிலைய அதிகாரி சதானந்த் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை போலீஸ் ஐஜி பி.கே.பாண்டே தெரிவித்தார்.
s-186 சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரவிசங்கர் உள்ளிட்ட இருவர் இந்த துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்தனர்.
s-187 இதையடுத்து ராஞ்சியில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் தும்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
s-188 விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் .
s-189 ரம்ஜானை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக , பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 85 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக இந்தியா இன்று அறிவித்தது.
s-190 இந்தியாவில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் ஆவர்.
s-191 குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 58 மீனவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-192 அவர்களுடன் , பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறைகளில் இருந்து தலா 7 பேரும் , ராஜஸ்தான் சிறையில் இருந்து ஒருவரும் , தில்லி சிறையில் இருந்து 2 பேரும் விடுவிக்கப் படுகின்றனர்.
s-193 மொத்தம் 85 பேர் விடுதலைசெய்யப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
s-194 இந்த ஆண்டு இதுவரை 128 கைதிகள் விடுவிக்கப் பட்டு, அட்டாரி வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .
s-195 தற்போது புதிதாக 85 பேர் விடுவிக்கப்பட உள்ளதையடுத்து இந்த ஆண்டு மொத்தம் 213 கைதிகளை இந்தியா விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
s-196 அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பது அமெரிக்காவுக்கு முக்கியம் என்று அந்நாட்டின் அதிபர் ஒபாமா கூறியுள்ளார் .
s-197 வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
s-198 'பின் லேடன் உயிருடன் பிடிபட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும்.
s-199 அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது முக்கியம் என்பதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
s-200 இதற்காக நாட்டின் மிகச் சிறந்த அதிகாரிகளும் வீரர்களும் இரவும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.

Text viewDownload CoNNL-U