Dependency Tree

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Partdev
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Select a sentence

s-1 சாதாரண, சாமானிய ஏழையெளிய மக்களுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அனைவரும் பாடுபட வேண்டும்.
s-2 அனைத்துத் துறைகளையும் விட, மருத்துவத் துறை தான் மனிதாபிமானத்தோடு உடன்பாடு கொண்ட துறையாகும்.
s-3 ஆகவே, அனைவரும் மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு மருத்துவத் துறைப் பணியை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் கருணாநிதி பேசினார்.
s-4 இந்த நிகழ்ச்சியில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யும் , மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
s-5 தனக்கு உடல் நிலை இடம் தரா விட்டாலும் , அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
s-6 சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையின் 125-ம் ஆண்டு விழாவில் பேசும் போது அவர் இதைக் கூறினார்.
s-7 அவர் பேசியதாவது :.
s-8 மருத்துவமனைக்கு வருகை தந்ததும் , அதற்கேற்ப உடல்நிலையும் சரியில்லை.
s-9 உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனை விழாவுக்கு வரவில்லை .
s-10 பிறருடைய உடல்நிலை சரியாக இருக்க வேண்டுமென்ற காரணத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிற மருத்துவமனையின் திறப்பு விழா என்பதால் கலந்து கொண்டுள்ளேன் .
s-11 மேலும், இந்தத் தொகுதியின் (சேப்பாக்கம்) சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனது கடமை.
s-12 சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் என்கிற நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்ற உடல்நிலை இடம் தரா விட்டாலும் , இங்கே வந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
s-13 விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் .
s-14 நவராத்திரி விழாவும் , அதற்கு சிகரம் வைத்தாற் போல விஜயதசமி விழாவும் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
s-15 நவம் என்றால் ஒன்பது.
s-16 நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும் , அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும் , கடைசி மூன்று நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள்.
s-17 மகிஷாசுரனை தேவியானவள் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி.
s-18 கைவினை கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் , உழைப்பிற்கும் , தொழிலுக்கும் மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த நாட்கள் அமைந்து இருக்கின்றன.
s-19 வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை.
s-20 இந்த நன்னாளில், அனைவரும் எல்லா நலன்களையும் , வளங்களையும் பெற்று அமைதியுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலர மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
s-21 தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-22 இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
s-23 இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் என். வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், ப. செல்வசிங், இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம். கோபு, எஸ்.எஸ். தியாகராஜன், கே. சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
s-24 என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களும் , ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .
s-25 தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காணப்படவில்லை .
s-26 இப்பிரச்னையில் தி.மு.க. சார்பிலான தொ.மு.ச. தொழிற்சங்கத்துடன் சேர்ந்து, ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்ளுக்கு எதிராக செயல்படுகின்றன.
s-27 பிரச்னைக்கு தீர்வு காண தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
s-28 பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப் படுகின்றன.
s-29 தொழிலாளர்கள் பழிவாங்கப் படுகின்றனர்.
s-30 இதற்கு தமிழக அரசும் உடந்தையாக உள்ளது.
s-31 மேலும், டாஸ்மாக் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் போராடியபோது அவர்களை ஒடுக்க தமிழக அரசு காவல் துறையை ஏவியது.
s-32 எனவே, தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
s-33 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-34 அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
s-35 இரு நாடுகள் இடையிலான உறவில் ஒபாமாவின் பயணம் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் தெரிவித்தார்.
s-36 ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்களிடம் பேசிய அவர், ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு , அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்தியுள்ளது .
s-37 இரு நாடுகளின் நலன் மட்டுமின்றி சர்வதேச அளவில் பயன்பெறும் வகையில் ஒபாமாவின் இந்தியப் பயணம் அமையும்.
s-38 இரு நாடுகளில் நிலவும் உறுதியான அரசியல் சூழல் இதற்கு உறுதுணையாக உள்ளது.
s-39 பொதுவாக இரு நாடுகளும் பயனடையும் விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு , புதிதாக உருவெடுக்கும் சர்வதேச அச்சுறுத்தல் மற்றும் சவால்களை சேர்ந்து சமாளிப்பது குறித்தும் உத்திகள் வகுக்கப்படும் .
s-40 எதிர்காலத்தில் சேர்ந்து செயல்படும் துறைகளைக் கண்டறிந்து அதற்குரிய உத்திகளை வகுக்கவும் இந்தப் பயணம் உதவிகரமாக அமையும்.
s-41 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு வருகிறது.
s-42 இது தவிர, தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்த பரிமாற்றமும் அவ்வப்போது மேற்கொள்ளப் படுகிறது.
s-43 கிழக்கு ஆசியா குறித்த பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .
s-44 இதன் மூலம் ஆசியான் நாடுகள் இடையே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து தகவல் பரிமாறவும் , அதை வலுப்படுத்துவது Kஉறித்தும் ஆராயப்படும் .
s-45 இரு நாடுஉம் இணைந்து ஆப்பிரிக்காவை மேம்படுத்துவது Kஉறித்தும் விரிவாக பேசப்படும் .
s-46 இரு நாடுகள் மட்டுமே சார்ந்த விஷயங்கள் அல்லாது சர்வதேச சமூகத்தை காக்கும் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆராயப்படும்.
s-47 குறிப்பாக கடல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் இணையதள மோசடி, குற்றங்களை தடுப்பது Kஉறித்தும் இரு நாடுகளும் விவாதிக்கும்.
s-48 இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவின் புதிய பரிமாணமாக ஆக்க பணிகளில் அணு சக்தியை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .
s-49 இரு நாடுகள் இடையிலான கூட்டு முயற்சியில் இதுவரை அணுசக்தித் துறையிலான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது.
s-50 அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதால் அத்துறையிலும் இனி இரு நாடுகளும் கூட்டாக ஈடுபடும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது .
s-51 அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அணு மின் நிலையங்களுக்குத் தேவையான அணு உலைகளைத் தயாரிப்பதற்கான வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
s-52 இதேபோல இந்திய விண்வெளி ஆய்வில் அமெரிக்காவுடனான கூட்டு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த உதவும்.
s-53 நீராதாரம், பருவ நிலை நிலவரம், வானியல் ஆய்வு, விமான சேவை உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .
s-54 மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பிடிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும்.
s-55 இதற்காக பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்க நடவடிக்கையை அமெரிக்கா ஏற்கும் என நம்புவதாக மீரா சங்கர் கூறினார்.
s-56 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சர்வதேச நிதி அமைப்புகளான உலக வங்கி மற்றும் அன்னியச் செலாவணி நிதியம் (ஐஎமெப்) உள்ளிட்டவற்றில் நிதிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது .
s-57 இது தொடர்பான ஆலோசனைகளையும் இந்தியா வழங்கி வருகிறது.
s-58 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது .
s-59 சர்வதேச அளவில் தமக்குள்ள பொறுப்பை செயல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வமாக உள்ளது என்றார் மீரா சங்கர்.
s-60 பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மதச்சார்பின்மை குறித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் எப்படி பேச முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
s-61 அவரது மதச்சார்பின்மை நம்பகத்தன்மைக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறினார்.
s-62 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கோதா மற்றும் சிக்தி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
s-63 பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள் .
s-64 ஒரு தலைவர் (மோடி) இங்கு வந்து பிரசாரம் செய்து விடக் கூடாது என்று அஞ்சுகிறீர்கள்.
s-65 பின்னர் எப்படி உங்கள் மதச்சார்பின்மையை நம்புவது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
s-66 பிகாரில் வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.
s-67 ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணியானாலும் சரி அல்லது ராஷ்ட்ரீய ஜனதாதளம் - லோக் ஜனசக்தி கூட்டணியானாலும் சரி இவை இரண்டுமே மத, ஜாதி அரசியலை முன்னிறுத்தி அரசியல் லாபம் அடைய முயல்கின்றன.
s-68 ஆனால் நாங்கள் (காங்கிரஸ்) மத, ஜாதி அரசியலை கடுமையாக எதிர்க்கிறோம்.
s-69 நாங்கள் சமூக நீதியையும் சமதர்மத்தையும் சமமான வளர்ச்சியையும் முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறோம்.
s-70 ஏழை, பணக்காரர், ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என எல்லோருக்காகவும் பாடுபடும் கட்சி காங்கிரஸ்.
s-71 இவர்களுக்கான கட்சி என்று காங்கிரசுக்கு முத்திரை குத்த முடியாது என்றார் ராகுல்.
s-72 அதனால் தான் பிகாரில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்.
s-73 தனித்துப் போட்டியிடுவது தொடக்கத்தில் சிரமமானது என்று எனக்குத் தெரியும்.
s-74 ஆனால் தொடர்ந்து போராடுவோம்.
s-75 வளர்ச்சிக்காக போராடுவோம்.
s-76 இளைஞர்கள் பங்கு பெறும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
s-77 தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற சிறந்த மத்திய திட்டங்கள் பிகாரில் ஊழல் காரணமாக சிறப்பாக அமல்படுத்தப் படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
s-78 பல்வேறு மத்திய திட்டங்களுக்காக 1 லட்சம் கோடி பிகாருக்கு அளிக்கப் படுகிறது.
s-79 ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நிதி ஏழைகளை, தேவையுள்ளோரை போய் சென்றடையவில்லை என்றார் அவர்.
s-80 தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சி பிகார் மாநில வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளது .

Text viewDownload CoNNL-U