ta-ttb-dev

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Partdev

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 18 - 28 < sentence 29 - 39 > sentence 40 - 50

தொழிலாளர்கள் பழிவாங்கப் படுகின்றனர். இதற்கு தமிழக அரசும் உடந்தையாக உள்ளது. மேலும், டாஸ்மாக் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் போராடியபோது அவர்களை ஒடுக்க தமிழக அரசு காவல் துறையை ஏவியது. எனவே, தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இரு நாடுகள் இடையிலான உறவில் ஒபாமாவின் பயணம் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் தெரிவித்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்களிடம் பேசிய அவர், ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு , அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்தியுள்ளது . இரு நாடுகளின் நலன் மட்டுமின்றி சர்வதேச அளவில் பயன்பெறும் வகையில் ஒபாமாவின் இந்தியப் பயணம் அமையும். இரு நாடுகளில் நிலவும் உறுதியான அரசியல் சூழல் இதற்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாக இரு நாடுகளும் பயனடையும் விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு , புதிதாக உருவெடுக்கும் சர்வதேச அச்சுறுத்தல் மற்றும் சவால்களை சேர்ந்து சமாளிப்பது குறித்தும் உத்திகள் வகுக்கப்படும் .

Download XMLDownload textSentence viewDependency trees