ta-ttb-dev

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Partdev

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 1 - 6 < sentence 7 - 17 > sentence 18 - 28

அவர் பேசியதாவது :. மருத்துவமனைக்கு வருகை தந்ததும் , அதற்கேற்ப உடல்நிலையும் சரியில்லை. உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனை விழாவுக்கு வரவில்லை . பிறருடைய உடல்நிலை சரியாக இருக்க வேண்டுமென்ற காரணத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிற மருத்துவமனையின் திறப்பு விழா என்பதால் கலந்து கொண்டுள்ளேன் . மேலும், இந்தத் தொகுதியின் (சேப்பாக்கம்) சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனது கடமை. சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் என்கிற நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்ற உடல்நிலை இடம் தரா விட்டாலும் , இங்கே வந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் . நவராத்திரி விழாவும் , அதற்கு சிகரம் வைத்தாற் போல விஜயதசமி விழாவும் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும் , அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும் , கடைசி மூன்று நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள். மகிஷாசுரனை தேவியானவள் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி.

Download XMLDownload textSentence viewDependency trees