Dependency Tree

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttrain
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Select a sentence

Showing 2 - 101 of 400 • previousnext

s-2 இது தொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:.
s-3 நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும் , புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
s-4 அதன்படி, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப் பட்டு நிறைவேற்றப் படுகின்றன.
s-5 கர்நாடகத்திலும் , ஆந்திரத்திலும் கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர்.
s-6 ஆனால், இந்த வரிசையில் சென்னை அருகே அமைக்கப்பட உள்ள கிரீன் பீல்டு விமான நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
s-7 மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொல்பொருள் ஆய்வுச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் .
s-8 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.
s-9 பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப் பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப் பட்டு உள்ளன.
s-10 ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் பாதுகாத்து வந்தனர்.
s-11 அப்படிப் பாதுகாத்த மக்களை, அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றி, உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது.
s-12 இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.
s-13 புதிய சட்டத்தின் படி, பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னத்திலிருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை.
s-14 மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.
s-15 குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ , கூடுதல் அறையோ , தாழ்வாரமோ , கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின் படி வீட்டின் உரிமையாளரும் , சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப் படுவார்கள்.
s-16 ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப் பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப் பட்டு உள்ளது.
s-17 இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப் பட மாட்டாது.
s-18 இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப் பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது .
s-19 மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
s-20 உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது .
s-21 அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக், உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது .
s-22 இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும் , இலங்கை 66வது இடத்தையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன .
s-23 ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன.
s-24 இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை.
s-25 அமெரிக்கா 11வது இடத்தையும் , ஜெர்மனி 12வது இடத்தையும் , இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன .
s-26 நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிய வந்தன.
s-27 வாசகர்களிடம் உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப் பட்டது.
s-28 அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-29 இதே சர்வேயில், அதிகம் நேசிக்கப் படும் உலகத் தலைவர்கள் யார்? என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
s-30 எம்பிக்களுக்கு மேலும் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது .
s-31 முன்னர் அறிவிக்கப் பட்ட ஊதிய உயர்வுடன் , அலுவலகம் மற்றும் தொகுதி செலவினங்களுக்கான படிகளை தலா ரூ 5 ஆயிரம் கூடுதலாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
s-32 முன்னதாக, எம்பிக்களுக்கான ஊதியத்தை ரூ 16 ஆயிரத்திலிருந்து ரூ 80 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்திருந்தது .
s-33 இதை அரசு ஏற்கவில்லை .
s-34 கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எம்பிக்களின் ஊதியத்தை ரூ 50 ஆயிரமாக உயர்த்த முடிவெடுக்கப் பட்டது.
s-35 இதற்கு எம்பிக்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
s-36 ஊதிய உயர்வு தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாஜக, ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜவாதி மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் சனிக்கிழமையன்று சந்தித்தனர்.
s-37 இவ்விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பிரணாப் முகர்ஜி அப்போது உறுதியளித்திருந்தார் .
s-38 இந்த நிலையில் மேலும் ரூ 10 ஆயிரம் ஊதியத்தை உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
s-39 திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளியப்பன் இன்று அதிமுக பொதுச்செயலரும் எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
s-40 இச்சந்திப்பின்போது துணைவேந்தர் காளியப்பனின் மனைவியும் உடன் வந்திருந்தார் .
s-41 இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-42 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
s-43 இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.
s-44 திருவிழா தொடக்க நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப் பட்டது.
s-45 1.30 மணிக்கு விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது.
s-46 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
s-47 அதனைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற்றது.
s-48 அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலிலிருந்து வெள்ளிப் பல்லக்கில் வைத்து கொடி பட்டம் 9 சந்திகள் வழியாக வீதி உலா கொண்டு வரப் பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு வேதங்கள் ஓத, பஞ்வாத்தியங்கள் முழங்க, பக்தர்களில் ஆரோகரா கோஷத்துடன் , திருக்கோயிலில் உள்ள செப்பு கொடி மரத்தில், சிவாச்சாரியர்களால் ஆவணித் திருவிழா கொடியேற்றப் பட்டது.
s-49 இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆலன் லாம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
s-50 சர்வதேச கிரிக்கெட்டில் மோசடிக்கு இடம்தரக் கூடாது எனக் கூறிய லாம்ப், எந்த வீரராவது சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்க வேண்டும் என்றார்.
s-51 இந்தியா அளிக்க முன்வந்த வெள்ள நிவாரண நிதியை முதலில் ஏற்கத் தயக்கம் காட்டி, பின்னர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பாகிஸ்தான், தற்போது அந்த நிதி உதவியை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஏற்க தீர்மானித்துள்ளது .
s-52 பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு குழுக்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் பணியாற்றி வருகின்றன.
s-53 எனவே ஐநா சபை மூலமாக நிதி உதவியை அளிக்குமாறு இந்தியாவுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.
s-54 பாகிஸ்தானின் கொள்கைப் படி இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
s-55 இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியது.
s-56 இலங்கையிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர்.
s-57 பின்னர் கேப்டன் தோனியைத் தவிர அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
s-58 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள தோனி, சென்னையில் நாளை மாலை ஐபிஎல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
s-59 இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்ற இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
s-60 வெனிசூலா தேசிய பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கொலம்பிய எல்லை அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 10 வீரர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் தெரிவித்தார்.
s-61 ரஷ்யத் தயாரிப்பான எமை-17 ஹெலிகாப்டர் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சாவேஸ் தொலைக்காட்சியில் பேசும் போது தெரிவித்தார்.
s-62 தென்மேற்கு அபூர் மாநிலத்தில் போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள குழுவினரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தேசிய பாதுகாப்புப் படையின் தலைவர் லூயிஸ் ஆல்ஃப்ரடோ தெரிவித்தார்.
s-63 கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாக உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது .
s-64 ஆகஸ்ட் 28-ம் தேதி கான்பூர் ஐஐடி ஏற்பாடு செய்திருந்த கங்கை ஆற்று நதிநீர்ப் படுகை நிர்வாகப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கங்கையை சுத்தப்படுத்துவதில் உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மை குறித்து விமர்சித்திருந்தார் .
s-65 இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் , அதை மாசுபடுத்தி வந்த 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாகவும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது .
s-66 மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் தங்களது துறைக்கு உடன்பாடு இல்லை என உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி ராதேஷ்யாம் தெரிவித்தார்.
s-67 பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப் பட்டனர்.
s-68 தண்டனைக் காலத்தை தாண்டியும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புகார் கூறப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
s-69 மேலும், 342 மீனவர்கள் அடுத்த வாரம் விடுதலை செய்யப் படுவார்கள் என்று லாந்தி சிறைச்சாலையின் துணை கண்காணிப்பாளர் ஷாகிர் ஷா தெரிவித்தார்.
s-70 அரபிக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் எல்லை தாண்டி வந்த குற்றச்சாட்டில் அவ்வப்போது இருதரப்பிலும் கைது செய்யப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
s-71 தான் ஒரு முஸ்லீம் என ஐந்தில் ஒரு அமெரிக்கர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு குறித்து கவலைப்பட போவதில்லை என அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
s-72 ஒபாமா முஸ்லீம் என 18 சதவீத மக்கள் நம்புவதாக பியு ஆராய்ச்சி மையம் இம்மாதத் தொடக்கத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது .
s-73 மார்ச் 2009-ல் 11 சதவீதத்தினர் தான் நம்பியதாகவும் , அது இப்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
s-74 மேலும் ஒபாமா கிறிஸ்துவர் என கடந்த ஆண்டு 48 சதவீதத்தினர் நம்பியதாகவும் , அது இப்போது 34 சதவீதமாகக் குறைந்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டது.
s-75 தனது மதம் தொடர்பான குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒபாமா, இது போன்ற வதந்திகளுக்காக தான் பெரிதும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
s-76 சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை லண்டன் போலீஸார் கைது செய்ய மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .
s-77 ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் ஆட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் இரண்டாவது முறையாக இன்று விசாரிக்கவுள்ளனர் .
s-78 இதனால் அவர்கள் கைது செய்யப் படக் கூடும் எனக் கருதப் பட்டது.
s-79 இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் யாவர் சயீத், 'புகாரில் சிக்கியிருக்கும் மூன்று வீரர்களையும் லண்டன் தூரகரத்தில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மட்டுமே விசாரிப்பதாக இருந்தது.
s-80 தற்போது ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் இரண்டாவது முறையாக விசாரிக்கவுள்ளனர் 'என்றார்.
s-81 எனினும் இதுவரை யார் மீதும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் குற்றம்சாட்டவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், வீரர்கள் சார்பில் விசாரணையை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
s-82 இப்போதைக்கு யாரும் கைது செய்யப் படும் நிலையில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார் .
s-83 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை கொடநாடு எஸ்டேட் வந்தார்.
s-84 சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
s-85 வரும் வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
s-86 அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
s-87 தொடர்ந்து, அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும் , டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
s-88 பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
s-89 கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
s-90 வழியெங்கும் அளிக்கப் பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
s-91 ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாட்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
s-92 தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.
s-93 தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார் .
s-94 மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது .
s-95 புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.
s-96 1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி.
s-97 தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார்.
s-98 தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும் , எழுதவும் தெரிந்தவர்.
s-99 எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார்.
s-100 திருச்சியில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.
s-101 அடுத்தடுத்த ஆண்டில் துணை ஆட்சியராகவும் , நிதி மற்றும் பொதுத் துறைகளில் சார்பு மற்றும் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

Text viewDownload CoNNL-U